நட்பு ராசிகள் – பகை ராசிகள்

 ராஜகோபுரம் ஆன்மீக ஜோதிட மாத இதழில் அடியேன் பீமராஜா எழுதியது:

ஓம்……

விக்னேஷ் ஜோதிட நிலையம் :

அனைவருக்கும் அடியேன் பீமராஜா வின் வணக்கம் ,

உலகத்தில் எதுவும் எவரும் தனித்து இயங்கவோ இருக்கவோ முடியாது.ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் மற்றவற்றையோ,மற்றவரையோ சார்ந்தோ,சேர்ந்தோ தான் வாழ முடியும்.

தாய்,தந்தை,சகோதர,சகோதரிகள்,உறவுகள்……தானாக அமைவது.இவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,இவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள்,கூட்டாளிகள்(partners),வேலையாட்கள்……இவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். இவ்விஷயம் முற்காலத்தில் சற்று எளிமையாக இருந்தது.எப்படி எனில் அப்போதெல்லாம் ஒருவரைப்பற்றி,ஒரு குடும்பத்தைப்பற்றி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் இக்காலத்தில் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் பற்றிக்கூட நமக்கு தெரிவதில்லை.

எனவே நாம் நம்முடைய சுபாவம்,குணாதிசயம்,கொள்கை,பழக்க வழக்கத்திற்கு ஒத்துவராத,நேர்மாறானவர்களோடு நட்பு வைத்து அல்லது கூட்டுத்தொழில் செய்து ஏமாற்றம் துரோகம் கஷ்ட நஷ்டங்கள் வழக்கு வியாஜ்யங்கள் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.

இந்த நிலைக்கு ஆளாகாமலிருப்பதற்கும், முதலிலேயே நமக்கு ஏற்றவர்களை நம்மோடு ஒத்துப்போககக் கூடியவர்களை தெரிந்து கொள்வதற்கும் ஏதாவது உபாயம் இருக்கின்றதா?

ஆம்.நமக்கு ஒளியாக (ஜோதி) வழிகாட்டக்கூடிய ஜோதிடத்தில் இருக்கின்றது. அது ராசி.

ராம: நமங்களிலேயே உயர்ந்த சிறந்த எளிய நாமம் ராம. நாராயணா விலிருந்து ரா, நமசிவாய விலிருந்து ம.  அதுபோல ……

ராசி: ராமனிலிருந்து ரா, சிவனிலிருந்து சி. என கொள்ளுமளவிற்கு இறைவனுடைய அணுக்ரஹம் பெற்றவை ராசிகள்.

நமக்கு அதிர்ஷ்டத்தை வெற்றியை தரக்கூடிய ஒன்றை ராசி யானது என்கின்றோம்.

பிரிந்திருக்கும் இருவரை சமாதானப்படுத்த சேர்த்துவைக்க ராசி யாக போய்விடுங்கள் என்கின்றோம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த 12 ராசிகளில் ஏதாவது ஒரு ராசியில் நாம் பிறக்கின்றோம். நமக்கு (நம்முடைய ராசிக்கு) நட்பு ராசிகள், சமமான ராசிகள், பகை ராசிகளை (ராசிக்காரர்களை) தெரிந்து கொண்டு, சிறந்த நண்பர்களை, கூட்டாளிகளை (partners), வேலையாட்களை …… பெற்று நாமும் உயர்ந்து நம்மோடு சேர்ந்தவர்களையும் உயர்த்தலாம்.

ராசிகளின் தன்மைகள்

1.ஆண் ராசிகள், பெண் ராசிகள் 2. ஒற்றை ராசிகள், இரட்டை ராசிகள் 3. சர ராசிகள்,ஸ்திர ராசிகள், உபய ராசிகள் 4. நெருப்பு தத்துவ, நில தத்துவ, காற்று தத்துவ, ஜல தத்துவ ராசிகள் 5.தர்ம, அர்த்த(கர்மம்), காம, மோக்க்ஷ ராசிகள் 6.கிழக்கு திசை, தெற்கு திசை, மேற்கு திசை, வடக்கு திசை ராசிகள் 7.குட்டை, சம உயர, நெட்டை ராசிகள் 8.சிவப்பு நிற, வெண்மை நிற, கருப்பு நிற, கரும்பச்சை நிற ராசிகள் 9.குரூர குண ,சௌம்ய குண ராசிகள் 10.பித்தம், வாதம், சிலேத்தும ராசிகள் 11..பகலில் பலம் கொண்ட, இரவில் பலம் கொண்ட ராசிகள் என ராசிகளுக்கு பல்வேறு விதமான தன்மைகள் உள்ளன.

மேஷம் முதல் மீனம் வரையிலான ஒவ்வொரு ராசியும்  தலை முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு அங்கத்தையும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆடு, எருது, ஆண் பெண், நண்டு, சிங்கம், பெண், தராசு, தேள், வில் அம்பு, மான் திமிங்கிலம் , கும்ப கலசம், இரு மீன்கள் என ஒவ்வொரு ராசிக்கும் ஒரு வடிவம் அமைந்துள்ளது.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள ஒவ்வொரு ராசிக்கும் முறையே சித்திரை முதல் பங்குனி வரையுள்ள ஒவ்வொரு மாதமும் அமைந்துள்ளது.

அங்காரகன், சுக்கிரன், புதன், சந்திரன், சூரியன், குரு, சனீஸ்வரன் இவர்கள் 12 ராசிகளுக்குண்டான அதிபதிகளாவார்கள்.

இவற்றையும் இன்னும் ராசிகளுக்குண்டான ஏராளமான பண்பு குணம் பலம் தன்மைகைளையும்  ஆராய்ந்து நம் முன்னோர்களான சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் நமக்காக அருளியுள்ள ஜோதிட சாஸ்த்திரத்தில் நட்பு சமம் பகை ராசிகளாவன:

1.மேஷ ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

சிம்மம், தனுசு, மேஷம், மிதுனம், கும்பம்.

பகை ராசிகள்: கன்னி, மகரம், கடகம்.

2.ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

கன்னி, மகரம், மீனம், ரிஷபம், கடகம்.

பகை ராசிகள்: சிம்மம், தனுசு, கும்பம்.

3.மிதுன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

துலாம், கும்பம், மேஷம். சிம்மம், மிதுனம்.

பகை ராசிகள்: விருச்சிகம், மகரம், மீனம்.

4.கடக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி.

பகை ராசிகள்: துலாம், தனுசு, கும்பம், மேஷம்.

5.சிம்ம ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்.

பகை ராசிகள்: மகரம், ரிஷபம், மீனம், விருச்சிகம்.

6.கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

மகரம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம்.

பகை ராசிகள்: மேஷம், தனுசு, கும்பம்.

7.துலாம் ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

கும்பம், மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.

பகை ராசிகள்: மீனம், மகரம், கடகம்.

8.விருச்சிக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

மீனம், கடகம்,கன்னி, மகரம், விருச்சிகம்.

பகை ராசிகள்: கும்பம், மிதுனம், சிம்மம்.

9.தனுசு ராசிக்காரர்களுக்கு. நட்பு ராசிகள்:

மேஷம், சிம்மம், தனுசு, கும்பம், துலாம்.

பகை ராசிகள்: ரிஷபம், கன்னி, கடகம், மீனம்.

10.மகர ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

ரிஷபம், கன்னி, மகரம், மீனம், விருச்சிகம்.

பகை ராசிகள்: மேஷம், சிம்மம், மிதுனம், துலாம்.

11.கும்ப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

மிதுனம், துலாம், தனுசு, மேஷம், கும்பம்.

பகை ராசிகள்: கடகம், விருச்சிகம், கன்னி, ரிஷபம்.

12.மீன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:

கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம்.

பகை ராசிகள்: மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.

நட்பு பகை ராசிகளைத்தவிர மற்ற ராசிகள் சம ராசிகள் என்று அறியவும்.

பன்னிரண்டு ராசிகளுக்கும் உண்டான நட்பு சமம் பகை ராசிகளை அறிந்து கொண்டோம். இவற்றில் பெற்றோருடைய ராசியோ பிள்ளைகளுடைய ராசியோ பகை ராசியாக வந்தால் வருந்த வேண்டாம். இவர்கள் இறைவன் நமக்களித்த சக்திகள்.

சகோதர சகோதரியுடைய ராசியோ உறவினருடைய ராசியோ பகை ராசியாக வந்தால் விட்டுக்கொடுத்து செல்லவும். அன்பெனும் சாவி அனைத்து பூட்டுக்களையும் திறக்கும் வல்லமை கொண்டது.

முற்காலத்தில் நம்முடைய மன்னர்கள் இப்படியாகவே ஜோதிட சாஸ்த்திரம் காட்டிய வழி மூலமாக மந்திரிகள் தளபதிகள் ஒற்றர்கள் மற்றும் முக்கிய பதவிகளுக்கானவர்களை தேர்ந்தெடுத்தார்கள். வெற்றி பெற்றார்கள்.

இவ்வளவு மகிமை வாய்ந்த ஜோதிட சாஸ்த்திரத்தில் ராசிகளுக்குண்டான மகத்துவத்தை அறிந்து கொண்டோம். பின்பற்றுவோம். பயனைடைவோம்.

S.பீமராஜா ஐயர்

ஜோதிடர் & வாஸ்து நிபுணர்.

9841555174.FB_IMG_14338461266642466

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s